எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை மாத்திரம் இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வது அவசியம் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் நுகர்வுக்குத் தேவையான அளவு முட்டைகளை ஜனவரி மாதத்திற்குள் நாட்டில் உற்பத்தி செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதனால், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டில் முட்டைகள் உபரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் முட்டைகளை ஏற்றுமதி செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கைக்கு முட்டை மற்றும் அரிசி இறக்குமதி செய்யப்பட்டாலும் குறைந்த அளவு அரிசி மற்றும் முட்டையே ஏற்றுமதி செய்யப்படுவதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
சந்தையில் கொள்வனவு செய்பவர்களை பாதுகாக்கும் நோக்கில் இது மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.