காஸா பகுதியில் நடைபெற்று வரும் இராணுவ மோதல்களின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சர்ச்சைக்குரிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவும், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஈரான் ஆதரவும் அளித்ததே இதற்குக் காரணம்.
அதன்படி, அதிகரித்து வரும் இராணுவ சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.