Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எல்லை நிர்ணயம் மீள் பரிசீலனைக்குப்படுத்தப்படுவது அவசியம்;ஆணைக்குழுவின் தலைவர் கடிதம்!

எல்லை நிர்ணயம் மீள் பரிசீலனைக்குப்படுத்தப்படுவது அவசியம்;ஆணைக்குழுவின் தலைவர் கடிதம்!

2 years ago
in செய்திகள்

மக்கள் பிரதிநிதிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு மூடிய அறையில் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயம் மீள் பரிசீலனைக்குப்படுத்தப்பட வேண்டும் எனச் சமத்துவக் கட்சி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவுக்கு கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளது.

குறித்த கடிதம் நேற்றைய தினம் (28.03.2023) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரடியாக சமத்துக்கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரினால் நேரடியாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான பிரேரணைகள் மாவட்டச் செயலர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவொன்றின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இக் குழுக்களில் எவற்றிலும் மக்கள் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், அல்லது பொதுமக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியற் கட்சிகள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டு, தங்களின் எஜமானர்களை திருப்தி செய்யும் பிரேரணைகள், மாவட்டச் செயலர்கள் அடங்கிய குழுவினரால் மிகவும் நுட்பமான வகையில் உள்சேர்க்கப்பட்டிருக்கின்றது.

எனவே இது மீள் பரிசீலனை செய்யப்படல் வேண்டும் என்றே குறித்த கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கள யதார்த்தையும் சமூக கட்டமைப்புகளையும் கருத்தில் கொள்ளாமல், வெறும் மூடிய அறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்மொழிவுகள், சமூக இயங்கியலை, அதன் ஒருங்கிசைவை எவ்வாறு அழிவுக்கு இட்டுச் செல்லும் என்பது ஆராயப்பட்டிருக்கப்படவில்லை.

முற்றிலும் பொருத்தமற்ற ஆளணியினரை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் மேற்படி முன்வரைபுகள், சமூக வளர்ச்சியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் சமத்துவ கட்சி அடங்கலான அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் புதிய எல்லை நிர்ணயத்தின் மூலம் பல பிரதேசங்களில் (வட்டாரங்களில்) சமூகப் பிளவுகள் ஏற்படக்கூடிய நிலை ஏற்படுவதற்கான சூழலே அதிகமாகக் காணப்படுகிறது.

மட்டுமல்ல, ஏற்கனவே இருந்த வட்டார எல்லைகளை விரித்து அகலமாக்கும்போது குறித்த பிரதேசங்களில் (கிராம நிலையில் அல்லது கிராம சேவகர் நிலையில்) உரிய உறுப்பினர்களைத் தெரிவு செய்ய முடியாத நிலை மக்களுக்கு ஏற்படவுள்ளது.

இதனால் அபிவிருத்தி தொடக்கம் மக்கள் பிரதிநிதித்துவம் வரையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே இது சமூகப் பிளவுகளை ஆழமாக உண்டாக்கும். புதிய வட்டார எல்லைகளிற் பலவும் பொருத்தப்பாடற்றவையாகக் காணப்படுகின்றன.

இதனை மீள்பார்வைக்குப்படுத்த வேண்டும். இவ்வாறு வகுக்கப்படுமிடத்து அபிவிருத்திப் பணிகளைச் செய்வதற்கும் சபையில் உரிய பிரதேசங்களின் குரலை ஒலிப்பதற்கும் நெருக்கடிகளே அதிகமாக இருக்கும்.

இதுவும் சமூகக் கொந்தளிப்பை உண்டாக்கும். மேலும், கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தங்களுக்கும், சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில், உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக நடைபெற்ற சந்திப்பொன்றின்போது, கட்சிகளின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் கவனத்துடன் பரிசீலிக்கப்படும் என்று தங்கள் வழங்கிய வாக்குறுதியை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மேற்படி சந்திப்பின்போது, தற்போதுள்ள தேர்தல் முறைகளிலும் உறுப்பினர் எண்ணிக்கையிலும் ஏற்படக்கூடிய எந்தவொரு மாற்றமும், இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மை சமூகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் புதிய தேர்தல் முறையொன்றின்கீழ் குறைந்தளவு எண்ணிக்கையில் உறுப்பினர் தேர்வு இடம்பெறுமாயின் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் சமுதாயங்கள் மேலும் புறக்கணிக்கப்படும் அபாயம் இருப்பதையும் ஒருமனதோடு சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

அத்துடன், விகிதாசார பிரதிநிதித்துவ முறை மட்டுமே இலங்கை போன்ற பன்முக சமுதாயங்கள் வாழக்கூடிய நாட்டிற்குப் பொருத்தமானதும் சரியானதும் ஆகும் என்பதும் அந்த சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆகவே, இவை போன்ற வரலாற்றுத் தவறுகள் எமது நாட்டில் மேலும் சமூக நெருக்கடியையும் பிரச்சினைகளையும் உருவாக்குமே தவிர, சுமுகமான சூழலை உருவாக்காது. நமது நாடு பிரச்சினைகளிலிருந்து மீள வேண்டியுள்ளது. அதற்கு அதிகாரப் பரவலாக்கம் மிகமிக அவசியமானது. அதைக் குறித்துச் சிந்திப்பதே மிகத் தேவையானதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு
செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு

May 18, 2025
மட்டு காந்திபூங்காவில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு
செய்திகள்

மட்டு காந்திபூங்காவில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு

May 18, 2025
தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில்பேத்தாழை பஸ்தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
காணொளிகள்

தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில்பேத்தாழை பஸ்தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

May 18, 2025
மே18 நினைவு நாளை வெற்றி நாளாக பிரகடனப்படுத்தும் நாமல்
செய்திகள்

மே18 நினைவு நாளை வெற்றி நாளாக பிரகடனப்படுத்தும் நாமல்

May 18, 2025
நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும்; மஹிந்த ராஜபக்ஸ
செய்திகள்

நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும்; மஹிந்த ராஜபக்ஸ

May 18, 2025
புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ ஏவிய இஓஎஸ்-09 செயற்கைக்கோள் தோல்வி
உலக செய்திகள்

புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ ஏவிய இஓஎஸ்-09 செயற்கைக்கோள் தோல்வி

May 18, 2025
Next Post
25 வருடகால வழக்கு விசாரணைக்கு இன்று மரண தண்டனை வழங்கியது மட்டக்களப்பு மேல் நீதிமன்றம்!

25 வருடகால வழக்கு விசாரணைக்கு இன்று மரண தண்டனை வழங்கியது மட்டக்களப்பு மேல் நீதிமன்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.