Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சமூக சகவாழ்வை சீர்குலைக்கும் முடிவுகளை அமுல்படுத்த வேண்டாம்; கிழக்கு மாகாண ஆளுநரிடம் வேண்டுகோள்!

சமூக சகவாழ்வை சீர்குலைக்கும் முடிவுகளை அமுல்படுத்த வேண்டாம்; கிழக்கு மாகாண ஆளுநரிடம் வேண்டுகோள்!

3 years ago
in மட்டு செய்திகள்

சமூக நல்லுறவு, சகவாழ்வு ஆகியவற்றோடு வாழும் சமூகங்களிடையே சமாதானத்தைச் சீர்குலைக்கும் முடிவுகளை அமல்படுத்த வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்திடம் வேண்டுகோள் விடுக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார். மாவட்ட சர்வமதப்பேரவையின் மாதாந்த ஒன்று கூடல் மட்டக்களப்பு கூட்டுறவு கேட்போர் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற பொழுது, மாவட்டத்தில் இன ஐக்கியத்தைச்
சீர்குலைக்கும் அதிகாரபூர்வவிடயங்கள் பற்றிய கரிசனைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த மாவட்ட சர்வமதப் பேரவைஉறுப்பினர்களும் அதன் சமாதான செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மீன் பாடும் தேன் நாடு எனும் பூர்வீகத் தமிழ்ப் பெயரை ‘மீனகயா’ என்று மாற்றியிருப்பது; அதேபோன்று மட்டக்களப்பு – கொழும்புக்கு இடையிலான ‘உதய தேவி’ ரயில்சேவைக்கு சிங்களப் பெயரைச் சூட்டியிருப்பது; மட்டக்களப்பு கல்லடிப் பாலத்துக்கு அருகிலுள்ளபூங்காவிற்கு சிங்களப் பெயரைச் சூட்டியிருப்பது; ஏறாவூர்- புன்னைக்குடா வீதியை‘எல்விஸ் வல்கம வீதி’ எனப்
பெயர் மாற்ற நடவடிக்கைஎடுத்திருப்பது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை சமூக நலஆர்வலர்கள் முன்வைத்தனர்.

இதன்போது, இவ்வாறான பூர்வீகங்களையும் சிறுபான்மை இனங்களின் அடையாளங்களையும் மாற்ற எடுக்கும் அதிகாரபூர்வநடவடிக்கைகளை, அமல்படுத்த வேண்டாம் என ஆளுநரைக் கோருவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வேண்டுகோள் கடிதம் ஆளுநர், மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் உட்பட சமாதான செயற்பாட்டு அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் இணைப்பாளர் மனோகரன் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

June 5, 2026
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு
செய்திகள்

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

June 4, 2026
கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா
காணொளிகள்

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

June 4, 2026
மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை
காணொளிகள்

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

June 4, 2026
காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்
அரசியல்

காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்

June 4, 2026
மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!
காணொளிகள்

மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!

June 4, 2026
Next Post
பெண் வேடத்தில் பரிகாரம் நிறைவேற்றும் ஆண்கள்!

பெண் வேடத்தில் பரிகாரம் நிறைவேற்றும் ஆண்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு