எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் முன்றிலில் நந்திக் கொடியை ஏற்றி வைக்குமாறு சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு க.சச்சிதானந்தன் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் குடியரசுத் தலைவர் அலுவலக முன்றலில் நந்திக்கொடியை ஏற்றி வைக்குமாறு குடியரசுத் தலைவர் அவர்களை இலங்கை வாழ் இந்துக்கள் அனைவரும் கேட்டுக்கொள்கிறோம்.
இலங்கையின் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை தொடரும் நம்பிக்கை நெறிசைவம்.75 ஆண்டுகால அண்மைக்கால விடுதலை வரலாற்றில், மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆட்சியில், குடியரசுத் தலைவர் அலுவலகம் முன்பு, தீபாவளி நாளன்று நந்திக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன.
மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தினார். நந்திக் கொடியைக் குடியரசுத் தலைவர் அலுவலகம் முன்பு பட்டொளி வீசிப் பறக்க ஏற்றினார்.மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் அவர்களே,கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நந்திக் கொடிகளைத் தீபாவளி நாள் அன்று குடியரசுத் தலைவர் அலுவலகம் முன்பு பறக்க விடுவீர்கள் ஆக.இலங்கை வாழ் இந்துக்களின் வாழ்த்துக் களையும் போற்றுதல்களையும் பாராட்டு களையும் தெரிவித்துக் கொள்கிறோம் – என்றுள்ளது.