காஸாவில் ‘பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட மற்றும் மனிதாபிமானக் கடமைகளை நிலைநிறுத்துதல்’ என்ற தீர்மானத்தை ஐநா பொதுச் சபை ஏற்றுக்கொண்டது.
ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் கிடைக்கப்பெற்றது.
45 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.