Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாணக்கியன்-அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் உட்பட 40 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

சாணக்கியன்-அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் உட்பட 40 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்புக்கு ஒக்டோபர் 7ஆம், 8 ஆம் திகதிகளில் விஜயம் செய்திருந்தார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து செங்கலடி மற்றும் நகரில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், 40 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பௌத்த தேரர்கள், கால் நடை பண்ணையாளர்கள், அரசியல் வாதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட 40 பேருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற கட்டளையை மீறி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஏறாவூர், மட்டக்களப்பு நீதிமன்றங்களில் வெள்ளிக்கிழமை (27) வழக்கு தொடர்ந்துள்ளதாக அந்ததந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150 வது வருட நிறைவு விழாவுக்கு கடந்த 7ஆம் திகதியும், செங்கலடி மத்திய மகாவித்தியாலய 149 வருட நிகழ்வுக்கு 8ம் திகதியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மட்டு. மேச்சல் தரை பண்ணையாளர்கள் தமது மேச்சல் தரையில் இருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுமாறு கோரி ஒருபுறமும் அந்த பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய சிங்கள மக்கள் தமக்கு அந்த நிலம் வேண்டும் என கோரி மற்றொரு புறமாகவும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்குபவர்களுக்கு தடை உத்தரவு வழங்குமாறு நீதிமன்றங்களில் பொலிஸார் விண்ணப்பம் செய்திருந்தனர்.

பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதித்ததுடன் அதனை மீறி வீதியை மறித்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால், போக்குவரத்து விதிமுறையின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு நீதிமன்றம் கட்டளை வழங்கியது

இந்தநிலையில் மிக்கேல் கல்லூரிக்கு ஜனாதிபதி 7ம் திகதி வருகை தந்திருந்த போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மட்டு. விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரர் தலைமையிலான மேச்சல் தரை மயிலத்தமடு மாதவனை சட்டவிரோத குடியேற்றவாசிகள் கொண்ட குழுவினர் கல்லூரிக்குள் உட்புகுவதற்கு முயற்சித்தனர். வீதிதடைகளை ஏற்படுத்தி அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் நீதிமன்ற கட்டளையை தெரிவித்த போதிலும் அதனை மீறி வீதியை மறித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கலடி மத்திய மாகாவித்தியாலயத்துக்கு ஜனாதிபதி 8ம் திகதி வருகைதந்திருந்த போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டவர்களை செங்கலடி வாழைச்சேனை பிரதான வீதி கொம்மாந்துறை விநாயகர் வித்தியாலயத்துக்கு அருகில் பொலிஸார் வீதித் தடையை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தியபோது வீதியை மறித்து பண்ணையாளர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்பினர், அரசியல்வாதிகள் நீதிமன்ற கட்டளையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நீதிமன்ற கட்டளைகளை அவமதித்து பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 7ம் திகதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மற்றும் இரு தேரர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக மட்டு. தலைமையக பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீதின்றில் வழக்கு தாக்குதல் செய்து, அவர்களிடம் முறைப்பாடு பெற்று, அவர்களை எதிர்வரும் 27ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை வழங்கினர்.

அதேவேளை 8ம் திகதி நீதிமன்ற கட்டளையை மீறி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியேந்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சி சட்டத்தரணி சுகாஸ், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி, மற்றும் பண்ணையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர் உட்பட 34 பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸார் வழக்கு தாக்தல் செய்து அவர்களிடம் வாக்கு மூலங்கள் பெற்று அவர்களையும் எதிர்வரும் 27ம் திகதி ஏறாவூர் சுற்றூலா நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்ற அழைப்பாணையை வழங்கியுள்ளனர்.

இவ்வாறு இரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அவர்களிடம் வாக்கு மூலங்களை பெறும் விசேட நடவடிக்கை ஒன்றை சனிக்கிழமை பொலிஸார் ஆரம்பித்து அவர்களை வீடுவீடாக தேடி வாக்கு மூலங்களை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணைகளை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுமதி
செய்திகள்

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுமதி

May 16, 2025
மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன அழிப்பு வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வு
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன அழிப்பு வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வு

May 16, 2025
சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம் தொரப்பில் 10 மாணவர்களுக்கு விளக்கமறியல்
செய்திகள்

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம் தொரப்பில் 10 மாணவர்களுக்கு விளக்கமறியல்

May 16, 2025
1,700 மெகாவோட் என்ற எல்லையை அடைந்த சூரிய மின் உற்பத்தி; இலங்கை மின்சார சபை தெரிவிப்பு
செய்திகள்

1,700 மெகாவோட் என்ற எல்லையை அடைந்த சூரிய மின் உற்பத்தி; இலங்கை மின்சார சபை தெரிவிப்பு

May 16, 2025
பதுளையில் கைப்பற்றப்பட்ட ஒரே இலக்கத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகள்
செய்திகள்

பதுளையில் கைப்பற்றப்பட்ட ஒரே இலக்கத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகள்

May 16, 2025
இனப்படுகொலையை இல்லையென்பது இனவாதத்தின் வெளிப்பாடே; சிறீதரன் எம்.பி.
செய்திகள்

இனப்படுகொலையை இல்லையென்பது இனவாதத்தின் வெளிப்பாடே; சிறீதரன் எம்.பி.

May 16, 2025
Next Post
நாடு முழுவதும் போராட்டத்துக்கு தயாராகும் அரச உத்தியோகத்தர்கள்!

நாடு முழுவதும் போராட்டத்துக்கு தயாராகும் அரச உத்தியோகத்தர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.