Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன அழிப்பு வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன அழிப்பு வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வு

10 hours ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இஸ்ரேலியருடைய வரலாற்றில் புளிப்பற்ற அப்பமும் கசப்பு கீரையும் அவர்களுடைய அடையாளமாக மாறி அந்த அடையாளத்தின் மூலமாக அவர்கள் நீதி கேட்டு மீண்டும் ஒரு சமூகமாக மீண்டெழுந்தார்களோ நாங்களும் இந்த கஞ்சியினை ஒரு அடையாளமாக மாற்றி பாதிக்கப்பட்டவர்கள், அழிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி இந்த நினைவேந்தலை மேற்கொண்டு, இந்த அடையாளத்தின் ஊடாக நீதி கேட்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் தலைவரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் தெரிவித்தார்.

இன அழிப்பு வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று(16) மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன அழிப்பு வாரத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் தலைவரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி, ஈ ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி உட்பட அருட்தந்தையர்கள், அருட்பணியினர் கலந்துகொண்டனர்.

மானுட வாழ்வின் வரலாற்று பெருந்துயரை நினைவுகூருவோம், பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தில் பங்கெடுத்து அவர்களுடன் இருப்போம், இன அழிப்புக்கு நீதிகோருவோம், மானுடத்திற்கு எதிரான அழிவுகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவோம் போன்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

இதன்போது இறுதி யுத்தததின்போது படுகொலைசெய்யப்பட்டவர்கள் நினைவுகூரப்பட்டு ஆத்மசாந்தி பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினால் முள்ளிவாய்க்கால் வலிசுமந்த கதை சொல்வோம் துண்டுப்பிரசுரங்களும் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வெளிநாட்டினரும் பங்குகொண்டதுடன், அவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அருட்தந்தை ஜெகதாஸ், இந்த வாரமானது தமிழின அழிப்பு வாரமாக உலகத் தமிழர்களால் நினைவு கூறப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு உலகில் நடாத்தப்பட்ட மிகப் பெரிய இன அழிப்பாக இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இன அழிப்பாக முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

16 ஆண்டுகள் கடந்து இன அழிப்புக்கு நீதி வேண்டிய மக்களாக இன்றைய நாளில் மட்டக்களப்பு கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு தற்போது நிறைவு கூறப்பட்டு கொண்டிருக்கின்றது.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பு செய்யப்பட்டபோது அந்த மக்களுக்கு எதுவித உணவும் இருக்கவில்லை. எதுவிதமான அடிப்படை வசதிகளும் இருக்கவில்லை. இலட்சக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்கால் பகுதியிலே முடக்கப்பட்டிருந்தபோது அங்கே கிடைக்கப்பெற்ற தண்ணீரையும் அரிசியையும் கொண்டு மக்களுடைய பசியை ஆற்றுவதற்காகவும் உயிரை பாதுகாப்பதற்காகவும் கஞ்சிகள் காய்ச்சப்பட்டது.

அந்த கஞ்சிகளுக்காக நீண்ட வரிசையிலே மக்கள் பசியோடும் வாட்டத்தோடும் காத்திருந்தார்கள். அந்த கஞ்சியை ஒரு வேளையாவது குடித்து தங்களது உயிரை தக்க வைப்பதற்காக சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள் எல்லாரும் கஞ்சி காய்ச்சப்படுகின்ற அந்த பாணைக்கு முன்பதாக வரிசையாக நின்று போது இராணுவத்தினரால் ஏவப்பட்ட ஏவுகணைகளும் வெடிகுண்டுகளும் அவர்களுடைய உயிரை குடித்தது.

எத்தனையோ தடவைகள் கஞ்சிப்பாணைகள் இரத்தப் பாணைகளாக மாறி கஞ்சிக்காக நின்ற மக்கள் கொன்றொழிக்கப்பட்ட துயரம் நடந்தேறியது.

சர்வதேசத்திடம் இந்த அழிப்புகளுக்கான நீதி கேட்கின்ற அதே நேரத்தில், முள்ளிவாய்க்கால் கஞ்சி பேரவளத்தினுடைய ஒரு அடையாளமாக இருக்கின்றது. எந்த கஞ்சியை குடிக்க விடாமல் கொன்றொழித்தார்களோ அந்த கஞ்சியை நாங்கள் நினைவு கூர்ந்து, அதனை அடையாளமாக மாற்றி அந்த பெரும் துயரை நினைவு கூறுவது மாத்திரமல்ல இவ்வாறான பெரும் துயர்கள் இந்த இன அழிப்புகள் இந்த உலகத்தில் நடைபெறக்கூடாது.

இன்று காசாவில் இன அழிப்பு நடைபெறுகின்றது. அந்த மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். ஆகவே நாங்கள் ஒரு இன அழிப்பை சந்தித்தவர்கள் இன அழிப்பில் இருந்து எஞ்சிய இனமாக நாங்கள் இருக்கின்றோம். ஆகவே அளிக்கப்பட்ட இனத்தினுடைய பிரதிநிதிகளாக இருந்து இந்த அடையாளத்தை நினைவு கூறுவதோடு நாங்கள் இன அழிப்புக்கான நீதியினை கேட்டு நிற்கின்றோம்.

இஸ்ரேலியருடைய வரலாற்றில் புளிப்பற்ற அப்பமும் கசப்பு கீரையும் அவர்களுடைய அடையாளமாக மாறி அடையாளத்தின் மூலமாக அவர்கள் நீதி கேட்டு மீண்டும் ஒரு சமூகமாக மீண்டெழுந்தார்களோ நாங்களும் இந்த கஞ்சியினை ஒரு அடையாளமாக மாற்றி பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி இந்த நினைவேந்தலை மேற்கொண்டு இந்த அடையாளத்தின் ஊடாக நீதி கேட்கின்றோம்.

இதனை நாங்கள் இன்று முன்னெடுத்து அழிக்கப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதோடு நாங்கள் அவர்களுக்கு நீதி வேண்டி நிற்பதோடும் இந்த இன அழிப்பு மீள இடம்பெறாமல் இருப்பதனை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் ஒன்று திரண்டு இந்த நினைவேந்தலை மேற்கொள்கின்றோம்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தமிழரசுக்கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக கூறி 4 பிரதேசசபைகளை கோரிய ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி
அரசியல்

தமிழரசுக்கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக கூறி 4 பிரதேசசபைகளை கோரிய ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி

May 16, 2025
அணுசக்தி ஒப்பந்தம்; ஈரானுக்கு இரு தீர்வுகளே உண்டு
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தம்; ஈரானுக்கு இரு தீர்வுகளே உண்டு

May 16, 2025
இறுதிப்போரின் போது சடலங்களில் இருந்த நகைகளை திருடி சப்பாத்திற்குள் வைத்த இராணுவம்
செய்திகள்

இறுதிப்போரின் போது சடலங்களில் இருந்த நகைகளை திருடி சப்பாத்திற்குள் வைத்த இராணுவம்

May 16, 2025
மாணவி மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் கற்கை நிலைய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது; சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
செய்திகள்

மாணவி மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் கற்கை நிலைய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது; சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

May 16, 2025
இன்று நள்ளிரவு முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்

May 16, 2025
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய உத்தரவு
செய்திகள்

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய உத்தரவு

May 16, 2025
Next Post
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுமதி

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.