உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 100 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
லக்னோவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 229 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் அதன் தலைவர் Rohit Sharma அதிகபட்சமாக 87 ஓட்டங்களையும் Suryakumar Yadav 49 ஓட்டங்களையும் KL Rahul 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் David Willey 3 விக்கெட்டுக்களையும் Chris Woakes மற்றும் Adil Rashid தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினா்.
இதன்படி 230 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 34.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 129 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து அணி சார்பில் Liam Livingstone அதிகபட்சமாக 27 ஓட்டங்களை பெற்ற அதேவேளை ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடனேயே ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Mohammed Shami 04 விக்கெட்டுக்களையும், Jasprit Bumrah 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியுடன் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.