Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈழத்தமிழனை வேரறுக்க நினைக்காதே;படையெடுக்கும் மக்களுடன் தமிழ் எம்பிக்கள்!

ஈழத்தமிழனை வேரறுக்க நினைக்காதே;படையெடுக்கும் மக்களுடன் தமிழ் எம்பிக்கள்!

2 years ago
in செய்திகள்

வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இன்றைய தினம் (30.03.2023) இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது, வவுனியா கந்தசாமி ஆலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு மணிக்கூட்டுக் கோபுர சந்தியை அடைந்து, அங்கிருந்து கடைத்தெரு வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து, வைத்தியசாலை சுற்று வட்ட வீதி ஊடாக மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்துள்ளது.

வவுனியா, நெடுங்கேணி, வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உட்பட ஏனைய விக்கிரகங்களும் கடந்தவாரம் உடைத்தழிக்கப்பட்டிருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், இந்த விசமச் செயலை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்திக் குறித்த பேரணி இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘வெடுக்குநாறிமலை மீதான தாக்குதல் கௌதம புத்தரின் ஆன்மிகத்தோல்வி, ஈழத்தமிழனை வேரறுக்க நினைக்காதே, வெடுக்புகுநாறி எங்களின் இடம், மத சுதந்திரத்தைத் தடுக்காதே, தொல்பொருள் திணைக்களமே வெளியேறு’ போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைளையும் ஏந்தி சென்றுள்ளனர்.

ஆர்ப்பாட்ட பேரணியாகச் சென்ற மக்கள் வைத்தியசாலை சுற்று வட்ட பகுதியில் அமைந்திருந்த தொல்பொருள் திணைக்கள அலுவலக வளாகத்திற்குள் சென்று வாயிலை மறித்து தொல்பொருள் திணைக்களமே வெளியேறு என கோஷமிட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து வெளியேறி மாவட்ட செயலகம் சென்றுள்ளனர்.

மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திரனிடமும், ஜனாதிபதிக்கான மகஜர் ஜனாதிபதியின் வடக்கிற்கான இணைப்பாளரும், மேலதிக செயலாளருமான ஈ.இளங்கோவன் அவர்களிடமும் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மகஜர் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இது குறித்து ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் அரச அதிபர் ஆகியோர் இணைந்து வாக்குறுதி வழங்கியதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சாள்ஸ்நிர்மலநாதன், சி.சிறிதரன், செ.கயேந்திரன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமயப் பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், காணாமல்போன உறவுகளின் சங்கத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

தமிழரசுக்கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக கூறி 4 பிரதேசசபைகளை கோரிய ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி
அரசியல்

தமிழரசுக்கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக கூறி 4 பிரதேசசபைகளை கோரிய ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி

May 16, 2025
அணுசக்தி ஒப்பந்தம்; ஈரானுக்கு இரு தீர்வுகளே உண்டு
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தம்; ஈரானுக்கு இரு தீர்வுகளே உண்டு

May 16, 2025
இறுதிப்போரின் போது சடலங்களில் இருந்த நகைகளை திருடி சப்பாத்திற்குள் வைத்த இராணுவம்
செய்திகள்

இறுதிப்போரின் போது சடலங்களில் இருந்த நகைகளை திருடி சப்பாத்திற்குள் வைத்த இராணுவம்

May 16, 2025
மாணவி மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் கற்கை நிலைய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது; சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
செய்திகள்

மாணவி மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் கற்கை நிலைய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது; சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

May 16, 2025
இன்று நள்ளிரவு முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்

May 16, 2025
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய உத்தரவு
செய்திகள்

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய உத்தரவு

May 16, 2025
Next Post
அழிவை எதிர்கொள்ள நேரிடும் ;இனப்பிரச்சனை தொடர்பில் ஜனாதிபதி!

அழிவை எதிர்கொள்ள நேரிடும் ;இனப்பிரச்சனை தொடர்பில் ஜனாதிபதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு