Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்குமாறு சாணக்கியனுக்கு கடிதம்!

கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்குமாறு சாணக்கியனுக்கு கடிதம்!

3 years ago
in மட்டு செய்திகள்

இன ஐக்கியத்ரைதச் சீர்குலைக்கும் கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கைகளை நிறுத்தக் குரல் கொடுக்குமாறு கோரி ஏறாவூரிலுள்ள மஸ்ஜிதுர் றிபாய் பள்ளிவாசல் நிர்வாகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புன்னைக்குடா வீதிக்கு “Elmis Walgama” என்னும் புதிய பெயர்மாற்றம் பல நூறு ஆண்டுகாலமாக ஏறாவூர் நகரம், ஏறாவூர்ப்பற்று ஆகிய இரண்டு உள்ளுராட்சி அதிகாரத்திற்கும் மற்றும் இரு பிரதேச செயலகங்களின் நிர்வாக எல்லைகளுக்கும் உட்பட்ட “புன்னைக்குடா வீதி” என்ற பெயருடன் பயன்படுத்தப்படும் இவ்வீதியானது ஏறாவூர்; நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் ஆரம்பித்து சுமார் 5.23 கிலோமீற்றர் நீண்டு சென்று புன்னைக்குடா கடற்கரையில் முடிவடைகின்றது.

இவ் வீதி அமைந்துள்ள பிரதேசம் முழுவதிலும் 99 சத வீதமாக தமிழ் முஸ்லிம் மக்களே நிறைந்து வாழ்கின்றனர்.

இவ் வீதிக்கு பெயரிடக்கூடிய எத்தனையோ தமிழ் முஸ்லிம் பிரமுகர்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்து மறைந்த போதிலும் இதில் யாரேனும் ஒரு தனிநபரின் பெயரைச் சூட்டுவதன் மூலம் ஒரு இன மக்கள் மனம் நொந்து கொள்வார்கள் என்பதால் பொதுவான “புன்னைக்குடா வீதி” என்ற பெயரையே இப்பகுதி மக்கள் மன நிறைவுடன் மிக நீண்டகாலமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.

இலங்கையின் வரைபடத்திலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கால காணி உறுதிகளிலும் இவ் வீதி புன்னைக்குடா வீதி என்ற பெயரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் தென்பகுதியைச் சேர்ந்த சுனில் ஆரியபால என்பவரின் தலைமையில் சிலர் ஒப்பமிட்டு கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றின் மூலம் மிகப் பழைமை வாய்ந்த புன்னைக்குடா வீதி என்னும் பெயரை “Elmis Walgama” என பெயர் மாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநரும் இதனைக் கவனத்தில் கொண்டு சில தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

ஆளுநரின் செயற்பாட்டை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எனவே தயவுசெய்து தாங்கள் இவ்விடயத்தில் கரிசனை செலுத்தி, இப்பகுதியில் இன நல்லுறவுக்கு குந்தகம் ஏற்படுத்தும் இவ் வீதிப் பெயர்மாற்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி தொடர்ந்தும் புன்னைக்குடா வீதி என்னும் பெயரிலேயே இவ்வீதி அழைக்கபபடவும், சகல இன மக்களின் நல்லுறவு பேணப்படவும் வழிசமைக்குமாறு தயவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கடிதம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷனின் 6ஆவது கிளை திறப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷனின் 6ஆவது கிளை திறப்பு!

July 20, 2026
வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்
செய்திகள்

வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்

July 20, 2026
பறிக்கப்படும் மட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்
காணொளிகள்

பறிக்கப்படும் மட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்

July 20, 2026
மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்றவர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்றவர் கைது

July 19, 2026
கழிவு அகற்றும் உழவு இயந்திரப் பெட்டியில் பாதயாத்திரைக்கான உணவுப் பொருட்கள் எடுத்துச் சென்ற மட்டக்களப்பு மாநகர சபை; ஈ.பி.டி.பி.யின் அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம்!
காணொளிகள்

கழிவு அகற்றும் உழவு இயந்திரப் பெட்டியில் பாதயாத்திரைக்கான உணவுப் பொருட்கள் எடுத்துச் சென்ற மட்டக்களப்பு மாநகர சபை; ஈ.பி.டி.பி.யின் அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம்!

July 17, 2026
Next Post
திடீரென தோன்றிய சிவலிங்கம்!

திடீரென தோன்றிய சிவலிங்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு