Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீடிக்கும் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சற்தரை விவகாரம்; நீதி வேண்டி கிழக்கு பல்கலைக் கழக மாணவர்களும் போராட்டம்!

நீடிக்கும் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சற்தரை விவகாரம்; நீதி வேண்டி கிழக்கு பல்கலைக் கழக மாணவர்களும் போராட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் இன்று 49 ஆவது நாளாக சித்தாண்டியில் தொடர்கிறது. பண்ணையாளர்களும்,கால்நடைகளும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அநீதிக்கு எதிராக நீதி வேண்டி இவ் சுழற்சி முறை போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இதற்கு வலு சேர்க்கும் முகமாக இன்று கிழக்கு பல்கலைக் கழகத்தின் அனைத்துப் பீட தமிழ் மாணவர்கள்,போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களது நீண்ட கால மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தருமாறு அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.
இன்று காலை கிழக்கு பல்கலைக் கழக முன்றலில் ஒன்று கூடிய மாணவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு பதாதைகளை ஏந்தியவாறும் பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக வந்து அவர்களுடன் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வீதியில் நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கைது செய் செய் அம்பிபிட்டிய தேரரை கைது செய்,அடக்காதே,அடக்காதே காவி உடை கொண்டு அடக்காதே,வேண்டும்,வேண்டும் நீதி வேண்டும்,கைது செய்,கைது செய் சூழ்ச்சி காரரை கைது செய், என்பன போன்ற கோஷங்களை ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர் அரசிற்கு எதிராக எழுப்பினார்கள்.

இதற்கான வன்மையான கண்டனங்களை தெரிவித்ததோடு தமிழ் மக்களது நில ஆக்கிரமிப்பு தொடருமாக இருந்தால் பல்கலைக் கழக மாணவர் என்ற ரீதியில் மக்களுடைய சுதந்திரத்திற்காகவும் நிலங்களை பாதுகாப்புக்காகவும் கவனயிர்ப்பு போராட்டம் தொடரும் என்பதையும் இதற்கொரு முறையான தீர்வொன்றை அரசாங்கமும் அரசும் ஜனாதிபதி பெற்றுத் தருமாறும் தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் வடகிழக்கு மாணவர் ஒன்றியம் இணைந்து இதனை விட பாரிய ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு இதற்கான தீர்வினை பெற்றெடுப்போம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள் தெரிவித்தனர். இதன்போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவாஞானம் சிறிதரன்,முன்னாள் பராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ப.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் அமைப்பாளர் த.சுரேஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

September 23, 2026
ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
செய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

September 23, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
Next Post
நாமல் ராஜபக்ஸ விடுதலை!

நாமல் ராஜபக்ஸ விடுதலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு