காசாவில் 241 இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பணய கைதிகள் ஹமாஸின் பிடியில் உள்ளனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
மேலும்,இதற்கு முன்பு 242 என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த எண்ணிக்கை திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை இறுதியானது அல்ல. அந்த பகுதியில் இராணுவ விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
குறித்த எண்ணிக்கையில், இதற்கு முன் விடுவிக்கப்பட்ட 4 பணய கைதிகள் மற்றும் படையினரால் மீட்கப்பட்ட இராணுவ வீரர் ஒருவரோ அடங்கமாட்டார்கள் என்று தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் அறிக்கை தெரிவிக்கின்றது.
இதேபோன்று, வடக்கு காசா முனை பகுதியில் நடந்த மோதலில், இதே சாடன் என்ற மற்றொரு வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என படையினர் அறிவித்துள்ளனர்.
அவர், 52ஆவது பட்டாலியனை சேர்ந்த பீரங்கியின் தளபதியாக முன்பு பணியாற்றியவர் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் காசா முனை பகுதியில் கடந்த வாரத்தில் இருந்து நடத்தப்பட்டு வரும் தரைவழி தாக்குதலில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் உயிரிழப்பு 24 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.