Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேலின் மிலேச்சத்தனங்களை கண்டித்து மட்டு ஏறாவூரில் போராட்டம்!

இஸ்ரேலின் மிலேச்சத்தனங்களை கண்டித்து மட்டு ஏறாவூரில் போராட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

அப்பாவி உயிர்களை பறிகொடுத்து பரிதவிக்கும் பலஸ்தீன மக்களுக்கு அனுதாபம் தெரிவித்தும், அங்கு அரங்கேறும் இஸ்ரேலிய மிலேச்சத்தனங்களை கண்டித்தும், பலஸ்த்தீன மண்ணின் விடுதலையை வலியுறுத்தியும், ஏறாவூர் மண்ணில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதன் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா அவர்களது ஏற்பாட்டில் ஏழுச்சிப்பேரணி நடைபெற்றது.

நேற்று 03 பகல் மக்களின் எழுச்சிப் பேரணியும் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையையும் தொடர்ந்து ஏறாவூர் ஜாமிஉல் அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் ஓட்டுப்பள்ளி மீரா ஜூம்ஆ பள்ளிவாசலில் இருந்து அமைதிப் பேரணியாக வருகை தந்து மணிக்கூட்டு கோபுர முன்றலில் பலஸ்த்தீன மக்களுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இஸ்ரேலின் மிலேச்சத்தனமான செயற்பாடுகளை கண்டிப்பதுடன் அதனை அடையாளப்படுத்தும் வகையில் மணிக்கூட்டு கோபுர முன்றலில் கறுப்பு துணியினை கட்டி விடும் நடவடிக்கையும் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் கையெழுத்துப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர், வெளியூர் முக்கியஸ்த்தர்களது பங்கேற்புடன் முன்னாள் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ளுஆ.நழீம் தலைமையில் இந்த பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் தெரிவானதும் ஆதரவாளர்களால் வரவேற்பு ஊர்வலமும் பொதுக்கூட்டமும் வழமைபோல ஏற்பாடு செய்யப்பட்ட போதும் அதை முற்றாக தவிர்த்து இன்றைய சூழலிலே பலஸ்த்தீன மக்களது துயரத்தில் பங்கேற்கும் விதமாகவும் சர்வதேச சமூகத்துக்கு இலங்கை முஸ்லிம்களது ஒன்றுபட்ட செய்தியை சொல்லும் ஆரம்பத்தளமாக இந்நிகழ்வை மாற்றி சமூக உணர்வுடன் செயற்பட்டதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!

September 15, 2026
பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு
செய்திகள்

பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

September 15, 2026
முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
Next Post
தாடி வைத்திருந்த காரணத்தால் பரீட்சைக்கு அனுமதி மறுக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக மாணவன்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.