Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசுக்கு 60 பரிந்துரைகள்; இலங்கைக்கு எதிராக ஐ.நா சுட்டிக்காட்டு!

அரசுக்கு 60 பரிந்துரைகள்; இலங்கைக்கு எதிராக ஐ.நா சுட்டிக்காட்டு!

3 years ago
in முக்கிய செய்திகள்

இலங்கையில் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் கடுமையாக மீறப்படுகின்றன என்று
சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இலங்கை அரசாங்கத்திடம் 60
இற்கும் மேற்பட்ட பரிந்துரைகளையும் செய்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு குறுகிய வரையறையை உள்ளடக்கிய சட்டம் ஒன்றே
அவசியம் என்பது உள்ளிட்ட இந்தப் பரிந்துரைகளை மனித உரிமைகளுக்கான சர்வதேச
கூட்டமைப்பு, மனித உரிமைகள் மேம்பாட்டுமையம் ஆகியவை வரவேற்றுள்ளன.
அத்துடன், ஐக்கிய நாடுகள் அமைப்பால் அடையாளம் காணப்பட்ட ஏராளமான மீறல்களை நிவர்த்தி
செய்வதற்கும் அதன் பரிந்துரைகளைதாமதமின்றி செயல்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கு மாறும் அந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் நாட்டின் ஆறாவது காலகட்ட அறிக்கையை மதிப்பாய்வு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு அதன் இறுதி அவதானிப்புகளை வெளியிட்டுள்ளது.இதன்படி, இலங்கை அரசாங்கம் கவனிக்க வேண்டிய மூன்று முன்னுரிமைப் பிரச்னைகளை மனித உரிமைகள் பேரவை அடையாளம் கண்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், பொதுமக்களின் சுதந்திரம்
மற்றும் பாதுகாப்பு என்பவனவே அந்த மூன்று முன்னுரிமை பிரச்னைகளாகும்.இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவைப் பொறுத்தவரை அந்த அமைப்புபாரிஸ் கோட்பாடுகளுக்கு முழுமையாக
இணங்குவதை உறுதி செய்யவும் அதன் உறுப்பினர்களின் நிய மன செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் அதன் ஆணையை அனைத்துப் பகுதிகளிலும் திறம்படவும்- சுதந்திரமாகவும் செயல்படுத்த போதுமான ஆதாரங் களை வழங்குமாறும் ஐக்கிய
நாடுகளின் மனித உரிமைகள் குழு அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், பயங்கரவாத எதிர்ப்பு நடவ டிக்கைகள் தொடர்பில் பயங்கர வாததடுப்பு சட்டத்தின் மூலம் 12 மாதங்கள்வரை குற்றஞ்சாட்டப் படாமல் நீண்ட கால விசாரணைக் காவல் சிறுபான்மையினர் குறிப்பாக தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள், அரசாங்க விமர்சகர்கள், ஓரினச் சேர்க் கையாளர்கள் மீதான அடக்குறை மற்றும் சித்திரவதை மூலம் ஒப்புதல் மூலங்களைப் பெறுதல் நிறுத்தப்படல் வேண்டும்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து பயங்கரவாதத்தின் குறுகிய வரையறையை உள்ளடக்கிய
சட்டத்தை கொண்டு வர வேண்டும். அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமைகள், கருத்துச்
சுதந்திரம் மற்றும் பொது விவகாரங் களில் பங்கேற்பது போன்ற பிரச்னை களும் மனித உரிமைகள் குழுவால் அடையாளம் காணப்பட்ட சில பிரச்னைகளையும் அது தொடர்பான பரிந்துரைகளையும் மனித உரிமைகள்பேரவை செய்துள்ளது.

இதேவேளை நிதிப் பற்றாக்குறையின் காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படுவது குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் தேர்தல் ஆணையத் தின் சுதந்திரத்தை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் திட்டமிடப் பட்ட உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை பரிந்துரைத்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

June 6, 2026
பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

June 6, 2026
செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
செய்திகள்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

June 6, 2026
Next Post
மீண்டும் கோட்டாவின் வீட்டுக்கு 3000 பாதுகாப்பு படையினர் கடமையில்!

மீண்டும் கோட்டாவின் வீட்டுக்கு 3000 பாதுகாப்பு படையினர் கடமையில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.