முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கு முன்பாக மேலதிகப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட அரகலய போராட்டத்தின் ஓராண்டு நிறைவை யொட்டி அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களால் மிரிஹான ஜூபிலி கனுவ சந்தியில் கொண்டாட்ட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த நிகழ்வு போராட்டமாகமாறாமல் இருப்பதற்காக பாதுகாப்பு வழங்குவதற்காகவே 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட் பட 3000 பாதுகாப்பு படையினர் அடங்கிய விசேட அதிரடிப்படை யினர் மிரிஹான தலைமையகப் பொலி ஸூக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மார்ச் 31, 2022 அன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தின் ஒரு வருட பூர்த் தியை முன்னிட்டு நேற்று போராட்டம் நடத்தப்பட லாம் என வெளியான தகவல்களை அடுத்தே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகக்கூறப்படடது.