ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் தபால் சேவையின் சகல சேவையாளர்களின் விடுமுறைகளும் 8,9,10 திகதிகள் இரத்து செய்யப்படுவதாகவும், எனவே சகலரும் சேவைக்கு சமுகளிக்க வேண்டும் எனவும் தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.
நடந்த சம்பவத்தின் பின்னணி
நுவரெலியா பிரதான தபால் நிலையத்தை ஹோட்டலொன்றுக்கு விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.