நாட்டின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் 16 லட்சம் அரச மற்றும் 8 மில்லியன் தனியார் துறை ஊழியர்களை மேம்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 1.6 மில்லியன் அரச ஊழியர்களின் சம்பளத்தை தனியார் துறையிலும் இதேபோன்ற திருத்தங்களைச் செய்து அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி விக்ரமசிங்கவின் முறையான வேலைத்திட்டத்தின் நோக்கம் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து பணியாற்றும் அரச மற்றும் தனியார் துறைகளை வலுப்படுத்துவதேயாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ரணிலின் தலைமையின் கீழ் அதன் வெற்றியின் மூலம் எதிர்காலத்தில் மின்சாரம், எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் எனவும், இறுதியில் இந்த திட்டத்தின் நன்மைகள் மூலம் மக்களுக்கு மிகவும் வளமான மற்றும் நிலையான பொருளாதாரத்திற்கு பங்களிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.