அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடருந்து கொஸ்கம, அளுத்தம்பலம் தொடருந்து கடவையில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் இயந்திரம் கலைந்து சுமார் 3 மீற்றர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியை செலுத்திய நபரும் பின் இருக்கையில் மற்றுமொரு பெண்ணும் பயணித்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் போது தொடருந்து கடவை மூடப்படாமல் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
