நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் மின் தடைகள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்வதற்கு இனி டிஜிட்டல் வழிமுறைகளை பயன்படுத்த முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதற்காக CEB Care மொபைல் அப்ளிகேஷன் அல்லது 1987 அழைப்பு நிலையத்தின் சுய சேவை IVR அமைப்பு போன்ற டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தலாம்.
மோசமான காலநிலை காரணமாக நாட்டில் அதிகளவில் மின் தடைகள் ஏற்படுவதால், அது தொடர்பில் கிடைக்கபெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அழைப்பு நிலைய பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மின் தடை குறித்த முறைப்பாடுகளை டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தி முறையிடுமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மேலும், தற்போதைய நிலைமைகளை கவனத்திற் கொண்டு, மின் தடை பிரச்சினைகளை சீரமைப்பதற்காக 24 மணி நேரமும் செயற்படும் இலங்கை மின்சார சபை செயற்படும் எனவும் தெரிவித்துள்ளது.