உடன் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை அணியை தனது உறுப்புரிமையில் இருந்து நீக்கியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று கூடிய நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அதன் கடமைகளை கடுமையாக மீறுவதாக தெரிவித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இலங்கையில் கிரிக்கெட் விவகாரங்களை தன்னாட்சி முறையில் நிர்வகிக்காமை, மற்றும் நிர்வாகம், ஒழுங்கு முறை மற்றும் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு என்பன இருப்பதாக தெரிவித்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அண்மைக்காலமாக கிரிக்கெட் நிறுவனத்திற்குள் பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.