Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய பயங்கரவாத தடைச்சட்டம்;இலங்கையில் அமுல்படுத்தப்படப்போகும் முழு மரணதண்டனை!

புதிய பயங்கரவாத தடைச்சட்டம்;இலங்கையில் அமுல்படுத்தப்படப்போகும் முழு மரணதண்டனை!

2 years ago
in செய்திகள்

அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தற்போதுள்ள வடிவத்திலேயே நிறைவேற்றப்பட்டால், அது மனித உரிமை மீறல்கள் மேலும் அதிகரிப்பதற்கும், அச்சட்டம் தவறான முறையில் பிரயோகிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும் என்று சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளதாவது:தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக பிறிதொரு சட்டத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் கடந்த 22ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த் தமானி அறிவித்தலில் வெளியிட்டது.

இருப்பினும், அதன் உள்ளடக்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் மோசமாக காணப்படுவதாக பல்வேறு தரப் பினரும் சுட்டிக்காட்டி வரும் நிலையில், இது குறித்து தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையி லேயே சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளது.

இது பற்றி அந்த ஆணைக் குழு மேலும் கூறியிருப்பதாவது:அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தற் போதுள்ள வடிவத்திலேயே
நிறைவேற்றப்பட்டால், அது மனித உரிமை மீறல்கள் மேலும் அதிகரிப்பதற்கும், அச்சட்டம்
தவறான முறையில் பிரயோகிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும் என்று நாம் கரிசனை கொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக, இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அதன் 4(1)(ஏ) சரத்தின் பிரகாரம்,
‘கொலைக்குற்றத்துக்கு’ தண்டனையாக மரண தண்டனை அறிமுகப்படுத்தப்படும்.இலங்கையை பொறுத்தமட்டில் கடந்த 1976ஆம் ஆண்டிலி ருந்து மரண தண்டனையை நிறைவேற்றுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. எது எவ்வாறெனினும், வாழ்வதற்கான உரிமைக்கு எதிரானதும், மனிதாபிமானமற்ற மிக மோசமான தண்டனையான மரண தண்ட னையை நாம் முழுமையாக
எதிர்க்கின்றோம்.

‘பயங்கரவாத செயற்பாடுகளுடன்’ எவ்வகையிலும் தொடர் புபடாதபோதிலும், ஏதேனு
மொரு விதத்தில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது எனும் விடயத்தை மரண தண்டனையை நியாயப்படுத்து வதற்காக பயன்படுத்தக்கூடாது.

புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இச்சட்டமூலத்தில் சில முன்னேற்றகரமான விடயங்கள்
உள்ளடக்கப்பட்டிருப்பினும் கூட, இதில் உள்ள ஏனைய கரிசனைக்குரிய விடயங்கள் நேர்மறையான விடயங்களை வலுவிழக்கச் செய்கின்றன.அதேபோன்று இப்புதிய சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்கு மிகப் பரந்து பட்ட வரைவிலக்கணம் வழங் கப்பட்டுள்ள நிலையில், அதனூடாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் போராட் டங்கள் அடக்கப்படக்கூடும் என்ற கரிசனை தோற்றம் பெற்றுள்ளது.

எனவே, திருத்தங்கள் எவையுமின்றி இச்சட்டமூலம் நிறை வேற்றப்படுமாயின், ஏற்கனவே
நடைமுறையில் உள்ள பயங்கர வாத தடைச் சட்டத்தின் விளைவாக இடம்பெற்ற மீறல்கள் தொடர்ந்து நிகழ்வதற்கு வாய்ப்பேற்படும்.

எனவே, இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் அதேவேளை, அதனை விடவும் மோசமான சட்டமொன்றின் ஊடாக அச்சட்டத்தை பதிலீடு செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இடைநிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்-என்றுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு
காணொளிகள்

மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு

May 18, 2025
நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்
செய்திகள்

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

May 18, 2025
மட்டு கல்லடிப் பால வாவியில் மின் விளக்குள் ஒளிர்ந்த நிலையில் மிதந்து வந்த இன அழிப்பை சொல்லும் மர்மப் பொருள்
காணொளிகள்

மட்டு கல்லடிப் பால வாவியில் மின் விளக்குள் ஒளிர்ந்த நிலையில் மிதந்து வந்த இன அழிப்பை சொல்லும் மர்மப் பொருள்

May 18, 2025
யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு
செய்திகள்

யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு

May 18, 2025
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
செய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

May 17, 2025
வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்
செய்திகள்

வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்

May 17, 2025
Next Post
கிழக்கு மாகாண ஆளுனரின் செயற்பாட்டுக்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்!

கிழக்கு மாகாண ஆளுனரின் செயற்பாட்டுக்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு