அரிசி மாஃப்பியாக்களின் செயற்பாடுகளே சந்தையில் கீரி சம்பா தட்டுப்பாட்டுக்கான காரணம் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
தேவையான அளவு கீரி சம்பா தொகை கையிருப்பில் உள்ள போதிலும்,
அரிசி ஆலை உரிமையாளர்கள் அதனை சந்தைக்கு வழங்குவதற்கு தயக்கம் காட்டுவதாக அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சிறுபோகத்தில் கீரி சம்பா அறுவடை குறைவடைந்திருந்தாலும், அதற்கு முன்னதாக பெரும்போகத்தில் செய்யப்பட்ட அறுவடையில்,
கீரிசம்பா கையிருப்பு தற்போதைய காலத்திற்கும் போதுமானதாக காணப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.