நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வருடத்திற்கு ஒரு முறை தவறாமல் கண் பரிசோதனை செய்து கொள்ளுமாறு தேசிய கண் மருத்துவமனை மக்களை வலியுறுத்துகிறது.
நாளை (14) உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, நீரிழிவு நோய் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, பார்வைக் குறைபாடுகளைத் தடுத்து, அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஊடகவியலாளர் மாநாடு இன்று (13) கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கையில் சுமார் 11 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அதிக வீதத்தை எதிர்பார்க்கலாம் எனவும் சத்திரசிகிச்சை நிபுணர் கபில பந்துதிலக தெரிவித்தார்.