Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வரவு செலவு திட்டம் ஆட்சியாளர்களுக்கு சொர்க்கம்; மக்களுக்கு நரகம்- சஜித் தெரிவிப்பு!

வரவு செலவு திட்டம் ஆட்சியாளர்களுக்கு சொர்க்கம்; மக்களுக்கு நரகம்- சஜித் தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள்

பௌத்தத்தை அடிப்படையாக கொண்டு வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்து ஜனாதிபதி பௌத்தத்தை அவமதித்ததாகவும், புத்த பகவான் கூட பிரார்த்தனை செய்ய வேண்டியவர்களுக்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று போதித்ததாகவும், ஆனால் தற்போதைய ஜனாதிபதி பிரார்த்தனை செய்ய வேண்டியவர்களுக்கு பிரார்த்தனை செய்யாமல் கீழ்மட்டப் பிரிவினரின் ஆணையைப் பெற்றுள்ளதாகவும், ஐ.எம்.எப் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வருவாய் இலக்குகளை நிறைவு செய்ய முடியாததால், இரண்டாவது ஐ. எம். எப்.கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில்,ஏனோ தானே அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி என்றும், வரவு செலவுத் திட்டத்தில் நரகம் பற்றி பேசினாலும், ஆட்சியாளர்கள் சொர்க்கபுரியில் உள்ளனர் என்றும், இந்த வரவுசெலவுத் திட்டத்தில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் திட்டம் பற்றி பேசும் முன், 2022 வரவு செலவுத் திட்ட முன்பொழிவில் எத்தனை விடயங்களை நிறைவேற்ற முடிந்தது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் எனவும், இன்று சமர்ப்பித்த வரவு செலவு திட்ட முன்மொழிவில் பாரியளவிலான விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நேற்று (13) பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கும் வரவு செலவுத் திட்டம் மூலம் சவால் விடப்பட்டுள்ளது.

அத்துடன் வாழ்க்கைச் செலவை 7000 இலிருந்து 17000 ஆக அதிகரிப்பதற்கான முன்மொழிவு வரவு செலவுத் திட்ட பிரேரணையில் இருந்த போதிலும்,அது 7500 முதல் 10000 வரை இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரவு செலவுத் திட்ட உரையின் சில அம்சங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்,இதன் மூலம் பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது எனவும், இது நாட்டு மக்களை ஏமாற்றும் ஊடக நிகழ்ச்சி எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட உரையின் மூலம் பௌத்தம் அவமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுப நேரத்தில் உரையாற்றப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையின்படி ஆட்சியாளர்களுக்கு சொர்க்கத்தையும் நாட்டு மக்களுக்கு நரகத்தையும் இந்த வரவுசெலவு திட்டம் காட்டியுள்ளதாவும், ஏப்ரல் மாதம் தொடக்கம் அரசாங்கத்திடம் பணம் இல்லை என்பதால் இதனை நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்,போலி வரவு செலவுத் திட்டங்களை முன்வைத்து பௌத்தத்தை கேவலப்படுத்தி மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

LIRNEasia கணக்கெடுப்பின்படி 30 இலட்சத்தில் இருந்து 70 இலட்சமாக வறுமையானது 40 இலட்சமாக அதிகரித்துள்ளதாகவும், அஸ்வெசும கூட அறிவியலற்ற வேலைத்திட்டம் எனவும், இது ஒரு அரசியல் சூது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

தனது உரையின் மூலம் இந்த வரவு செலவுத் திட்ட உரைக்கு தெளிவான மாற்று வழிகளை முன் வைப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
தனியார் துறை தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படவில்லை; நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டு!

தனியார் துறை தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படவில்லை; நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.