யாழ்ப்பாணம் – பலாலி, அந்தோனிபுரம் பகுதியில் கிணறு ஒன்றைத் துப்பரவு செய்யும் போது, கிணற்றுக்குள் பெருமளவான வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளன.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கிணற்றுக்குள் காணப்படும் வெடிபொருட்களை பாதுகாப்பான முறையில் மீட்பதற்காக, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வெடிபொருட்கள் எவ்வாறு கிணற்றுக்குள் வந்தன என்பது தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








