உரிய ஒப்பந்தங்கள் இல்லாத நிறுவனங்களையும் தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று (14) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, விலை நிர்ணயக் குழு ஒன்றின் ஊடாக மருந்துகளின் விலைகள் தொடர்பாக தீர்மானங்களை முன்வைக்குமாறும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கலந்துரையாடலில், நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான மருந்துகளை சரியான முறைகளில் இறக்குமதி செய்ய இதன் போது தீர்மானிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், கலந்துரையாடலில் அரச மருந்தக கூட்டுத்தாபனம் மற்றும் ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.