Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 150,000 நட்டஈடு!

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 150,000 நட்டஈடு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா 150,000 (ஒன்றரை இலட்சம் ரூபா) பணத்தினை நட்டஈடாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தெரியவருவதாவது, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அநேரத்தில் முக்கிய பதவிகள் வகித்த அவரது சகோதர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டோரே காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆர்டிகலா, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்கள் அனைவரும் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் எனவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்ட குழுவினால் மக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த போதே ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் பெரும்பான்மை அடிப்படையில் குறித்த இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது தொடர்பான மனுவில்,கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தொழிலதிபர்களுக்கு 681 பில்லியன் ரூபாய் வரி விலக்கு அளிக்கப்பட்டதாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இதுவே இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும் எனவும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பிரச்சினை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் தாமதம் மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடியின் போது 500 மில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மைப் பத்திரங்களைத் திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்ட பொருளாதார தவறான தீர்மானங்களுடன் கூடிய நிர்வாகப் பிரச்சினைகளையும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதேவேளை மனுதாரர்களுக்கு தலா 150,000 ரூபாவை நட்டஈடாக வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பில் நேற்றையதினம் (14) பாராளுமன்றத்தில் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த கருத்தில்-இந்தநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 07 பேரிடம் இருந்து, 22 மில்லியன் மக்களில் ஒவ்வொருவரும் தலா 150,000 ரூபாவை நீதிமன்றத்தினூடாக வசூலிக்க முடியும் எனவும் அதற்கு சட்டத்தில் இடமிருப்பதாவும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம் உயர் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ள நஷ்டஈடு வழக்கின் அடிப்படையில் இந்த நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கும் வழங்குவதற்கு போதுமான பணம் ராஜபக்ச சகோதரர்களிடம் நாட்டிற்கு வெளியில் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
தோட்டத்தொழிலார்களுக்கு இலவச காணி; அரசின் அறிவிப்புக்கு ஜீவன் வரவேற்பு!

தோட்டத்தொழிலார்களுக்கு இலவச காணி; அரசின் அறிவிப்புக்கு ஜீவன் வரவேற்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.