இலங்கைக்கு பொதியாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் எனும் ஆபத்தான போதைப்பொருள் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவரின் முகவரிக்கு கனடாவிலிருந்து 6 கிலோ போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நேற்று மதியம் ஒருகொடவத்தை வருமான கண்காணிப்பு பிரிவு ஆய்வு கூடத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
குறித்த போதைப்பொருள் பொதியின் உரிமையாளர் சார்பாக வந்த முகவர் ஒருவரும் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட குஷ் போதைப்பொருள் அடங்கிய பொதி கடந்த மாதம் 25ஆம் திகதி இலங்கைக்கு கிடைத்துள்ளது.
இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் அதனை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
தனையின் போது, கொள்கலனில் பொதி போன்று கவனமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த குஷ் என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதென சுங்கப் பேச்சாளர் சீவாலி அருக்கொட தெரிவித்துள்ளார்.