ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று முறைப்பாடுகளில் இலஞ்ச ஒழிப்பு ஆணையக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க , அமைச்சின் நிதியில் இருந்து சுமார் 8 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.