அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு சட்டமூலங்களில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்த) சட்டமூலம், ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டமூலம் என்பவற்றை சபாநாயகர் சான்றுரைப்படுத்தியுள்ளார்.
அதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்த) சட்டம், 2023 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டம், 2023 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்த) சட்டம், மற்றும் 2023 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டம் என்பன நேற்று (17) முதல் நடைமுறைக்கு வருகின்றன.