சேவைத்துறையில் முறைசாரா வகையில் பணியாற்றிவருபவர்களின் எண்ணிக்கை 60% ஆகும் என்றும், இவர்களை ஊழியர் சேமலாப நிதியத்தில் இணைத்துக்கொள்வதன் ஊடாக அவர்களின் சமூகப் பாதுகாப்பை உயர்த்த முடியும் என்றும் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஊழியர் சேமலாப நிதியம் செலுத்தும் 80 ஆயிரம் நிறுவனங்கள் மாத்திரமே தொழில் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டிருப்பதும் குழுவில் தெரியவந்தது.
இதற்கமைய நிறுவனங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவுசெய்யாத அனைத்து நிறுவனங்களையும் அடையாளம் காண்பதற்கான கட்டமைப்பொன்றைத் தயாரிக்குமாறும் குழு, தொழில் அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் நடைபெற்ற வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலேயே இந்த விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.