மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டு வந்த நினைவு தூபியை பொலிஸார் இன்று வியாழக்கிழமை (23) இடித்து தள்ளியுள்ளனர்.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வருவதாக கூறி, நீதிமன்ற உத்தரவுடன் சென்று அந்த நினைவு தூபியை பொலிஸார் இடித்து தள்ளியுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவு தூபி ஒன்றை மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கல்லால் அமைத்து வந்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த நினைவு தூபி அனுமதி எதுவும் பெறப்படாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வருவதாகவும் இதனை உடன் அகற்றுமாறும் உத்தரவிடக்கோரி பொலிஸார் வாழைச்சேனை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் அதனை உடனே அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுடன் தரவை மாவீரர் இல்லத்திற்குள் நுழைந்த பொலிஸார் அந்த நினைவு தூபியை இடித்து தள்ளி சென்றுள்ளனர்.