இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டின் கீழ் இந்த ஆண்டுக்கான (2023) இலங்கைப் பொருளாதார உச்சி மாநாடு இன்றைய தினம் (28) நடைபெறவுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஷங்ரில்லா விடுதியில் இடம்பெறவுள்ள இந்த மாநாடானது இன்றும் நாளையுமாக இரு தினங்களுக்கு இடம்பெறவுள்ளது.
மேலும், இந்த மாநாட்டில் 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்தியத் திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருந்த மொன்டெக் சிங் அலுவாலியா இலங்கையின் பொருளாதார மேம்பாடு குறித்து சிறப்புரை ஆற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த உச்சி மாநாட்டில், 600 இற்கும் அதிகமானோர் பங்குபற்றவுள்ள நிலையில் பலதரப்பட்ட பொருளியல் வல்லுநர்கள் இந்த மாநாட்டில் கலந்தும் கொண்டு உரையாற்றவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக கட்டமைக்கப்பட்ட திட்டங்களை ஆராய்ந்து அதில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்களை ஆர்யவதை இந்த மாநாடு இலக்காகக் கொண்டு செயற்படுவதையும் இந்த மாநாடு நோக்காகக் கொண்டுள்ளது.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் தேவையான பகுதிகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் இரட்டை நோக்கங்களை இந்த மாநாடு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.