கடந்த 27 ம் திகதி போரில் இறந்த உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தியும் மக்கள் அமைதியான முறையில் ஒன்று கூடி அஞ்சலி செய்த வேளையில் அவர்களுக்கு பல்வேறு தடைகளையும் மிரட்டல்களையும் விடுத்த பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியம் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மிகவும் மிலேச்சத்தனமாக நடந்து மக்களை அச்சுறுத்தியும் மக்களின் அடிப்படை உரிமையினையும் மறுத்தும் மக்கள் உணர்வுகளை புண்படுத்தும் முகமாக இலங்கை பொலிசார் நடந்து கொண்ட முறையானது இந்நாட்டிக் ஜனாநாயக ஆழுகையின் உண்மை வடிவத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன் சமகால நாகரிக உலகில் எங்குமே நடக்கதாக கொடுமையானதும் மிக அருவருத்தக்க முறையில் நடைபெற்றுள்ளது எனவும்
மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.