இன்று நாட்டில் உள்ள பாரிய பிரச்சினையாக ஒவ்வொரு புகையிரதமும் தாமதமாகி வருவதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மீதான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரயில் காலதாமதத்தால் மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
“பொதுவாக சொன்னால் தினமும் எடுத்துக் கொண்டால் சுமார் 390 ரயில்கள் பயணிக்க வேண்டும். ஆனால் இன்று 300 ரயில் பயணங்கள் மட்டுமே உள்ளன.
அத்துடன், பஸ் சீசன் டிக்கெட்டுகளுக்காக ஒதுக்கப்பட்ட இரண்டு பில்லியன் ரூபா இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.