ஸ்ரீஜெயவர்த்தனபுரபல்கலைக்கழக விஞ்ஞானிகளான சிரேஷ்ட பேராசிரியை சுரங்கி ஜெயவர்தன. சிரேஷ்ட பேராசிரியர் பிரதீப் ஜெயவீர. பேராசிரியர் மஞ்சுளா வீரசேகர, கலாநிதி சஜித் எதிர்சிங்க ஆகியோரின் வழிகாட்டலில் இறுதியாண்டு இளநிலை மாணவன் ஹசான் பிரியந்த நடத்திய ஆராய்ச்சியின் பின்னர் வெற்றிலையுடன் உட் கொள்ளப் படும்இளஞ்சிவப்பு சுண்ணாம்பில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய கூறுகள் இருக்கின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியின் மூலம் இளஞ்சிவப்பு சுண்ணாம்பில் புற்றுநோயை உண்டாக்கும் டோடமைன் பி என்ற வேதியியல் கூறு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
வெற்றிலையுடன் உண்ணும் சுண்ணாம்பு வகைளின் மாதிரிகள் யாழ்ப்பாணத்தீவைச்சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும், யாழ்ப்பாணப் பிரதேச மக்கள் வெற்றிலைக்குப் பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு சுண்ணாம்பில் புற்றுநோயை ஏற்படுத்தும் கூறு அதிகளவு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சிக்காக 48 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என ஆய்வுக்குழு கூறுகின்றது. 2019 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின் படி அதிகளவிலான வாய்ப்புற்றுநோய் நோயாளிகள் மற்றும் அதுதொடர்பான இறப்புகள் யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதன்படி நடத்திய ஆய்வு அறிக்கை சுகாதார அமைச்சு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் உணவுக்கட்டுப்பாட்டு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து பெறப்பட்ட சுண்ணாம்பு மாதிரிகள் மேலதிக ஆய்வகப்பரிசோதனைக்காக அரசாங்கத்தின் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு சுதேச பிரிவு ஏற்பாடு செய்தது.
அரசின் பகுப்பாய்வுதிணைக்களம்நடத்திய ஆய்வில், சுண்ணாம்பு மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் ‘ரோடமைன் பி என்ற கூறு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
பின்னர் இது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கும் ஆய்வுக்குழு அறிவித்தது.இந்தப்புற்றுநோய்க் காரணிகளைப் பற்றி யாழ்ப்பான் பிரதேசம் மற்றும்ஏனையபிரதேசங்களுக்கு தெரியப்படுத்துவது அவசியமானதாகும்.
வெற்றிலையுடன் உட்கொள்ளப்படும் இளஞ்சிவப்புசுண் ணாம்பை உடனடியாக சந்தைப் பயன்பாட்டிலிருந்து அதிகாரிகள் அகற்றுவது அவசியமானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.