உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசியலாக்குகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலையான நீதி கிடைக்க வேண்டுமாயின் நீதிமன்ற
செயல்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறிய அவர், இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் கத்தோலிக்க சமூகத்தினருக்கும் பேராயர் கர்தினால் ஆண்டகைக்கும் அரசாங்கம் நியாயத்தை வழங்கியுள்ளது. பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்குவது முற்றிலும் தவறானது. பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட கத்தோலிக்க சமூகத்தினர் இந்த விடயத்தை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள். இதனை முன்னிலைப்படுத்தி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றீர்கள். கத்தோலிக்க மக்களை ஒரு கட்டத்துக்குள்
கொண்டு வரப் ர்க்கின்றீர்கள்.
அடிப்படைவாத முஸ்லிம் தரப்பினர், சிங்களவர் ஒருவரை தலைவராகக் கொண்டுவர தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடுகின்றீர்கள். சாதாரண அறிவு உள்ளவர்கள்கூட இந்தக் கருத்தின் உண்மையை அறிவார்கள்.
ஆகவே, நண்பர் காவிந்த ஜெயவர்த்தன இந்த விடயத்தை அரசியலாக்க வேண்டாம். பேராயர் கர்தினால் குண்டுத்தாக்குதலை அரசியலாக்குகிறார். கத்தோலிக்க சமூகத்தினருக்கு நியாயம் கிடைக்க
வேண்டுமாயின் நீதிமன்ற செயல்பாடுகளுக்கு இடமளியுங்கள் – என்றார்.