வியட்நாம் நாட்டை சேர்ந்த நபரொருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டுள்ளது. அத்துடன், அவருக்கு நாசியிலிருந்து நீர் வடிதல் பிரச்சினையும் இருந்து வந்ததுள்ளது. இதையடுத்து, அந்நாட்டின் வடமத்திய கடற்கரை பகுதியின் டாங் ஹாய் (Dong Hoi) நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்தபோது அவருக்கு டென்ஷன் ந்யூமோசெபாலஸ் (tension pneumocephalus) எனும் அரிய நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இது மூளையில் உள்ள அழுத்தத்தைஅதிகரிக்கும் ஓர் அபாய நிலை ஆகும்.
இதற்கான காரணம் என்னவென்று மேலும் பரிசோதித்தபோது மருத்துவர்களே வியக்கும் வண்ணம், அந்த நோயாளியின் நாசி வழியாக சென்று மூளைக்குள் இரண்டு சாப்ஸ்டிக்ஸ் குச்சிகள் பதிந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைமருத்துவர்கள் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி வெற்றிகரமாக வெளியேஎடுத்துள்ளனர்.