பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்ட 74 மின் இணைப்புகளில் இருந்து 16 மில்லியன் ரூபா மின்கட்டணம் இலங்கை மின்சார சபைக்கு இன்னும் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டின் வருடாந்த கணக்காய்வு அறிக்கை மூலம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
குறித்த அறிக்கையின்படி, 29 மின் இணைப்புகளில் இருந்து 5 மில்லியன் ரூபா ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதுடன்,
மேலும் 30 மின் இணைப்புகளில் இருந்து 3 மில்லியன் ரூபா ஒரு வருடத்துக்கும் மேலாக செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.