வருமான வரி என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தான் ஈட்டும் ஒரு குறிப்பிட்ட வருமானத்திற்கேற்ப தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கு செலுத்தும் வரி ஆகும். அந்த வரியைக் கொண்டே அரசு சேவைகளை வழங்கும்.
ஆனால், உலகில் வருமான வரி வசூலிக்காத நாடுகளும் இருக்கவே செய்கின்றன. இங்கு வசிப்போர் எவ்வளவு சம்பாதித்தாலும், அரசுக்கு வரி செலுத்தத் தேவையில்லையாம்.
பஹாமஸ்
இந்த நாடு தனது குடிமக்களிடம் வருமான வரியை வசூலிப்பதில்லை. இந்த நாடு குடியுரிமையை சார்ந்திருக்காமல், வசிப்பிடத்தைச் சார்ந்துள்ளது. இருப்பினும், நிரந்தரக் குடியிருப்போருக்கு குறைந்தபட்ச வசிப்பிடத் தேவை என்பது 90 நாற்களாகும்.
வெளிநாட்டவர்களைப் பொருத்தவரையில், அவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சொத்துகள் வைத்திருக்க வேண்டும். அவர்கள் அரசுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கேற்ப கொள்முதல் தொகையை பூர்த்தி செய்ய வேண்டும்.
மொனாக்கோ
அதிக பணக்காரர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்று. மிகவும் அழகிய நாடாக உள்ள மொனாக்கோ தங்குவதற்கு ஏற்ற இடம். இங்கும் வருமான வரி கிடையாது.
இங்கு தங்குவதற்கே சட்டப் பூர்வ குடியிருப்பு அனுமதியைப் பெற வேண்டும். அது மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
ஆனால், அதற்கு 5 லட்சம் யூரோக்கள் செலவாகும். இங்கு குற்ற விகிதம் மிகவும் குறைவு.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
மத்திய கிழக்கில் உள்ள பல எண்ணெய் வள நாடுகளில் வருமான வரி அல்லது பெருநிறுவன வரி இல்லை. இவற்றில் ஒன்றுதான் ஐக்கிய அரசு எமிரேட்ஸூம்.
இது ஒரு செழிப்பான பொருளாதாரம், கலாசாரச் சூழலைக் கொண்டுள்ள நாடு.
பெர்முடா
இங்கு இளம்சிவப்பு மணல் கடற்கரைகள், உயர்ந்த உணவகங்கள், இயற்கை அழகுக்கு மிகவும் பிரபலமானது. இந்த நாட்டிலும் வருமான வரி அறவே கிடையாது.