வெளிநாட்டு சேவைக்கு அதிகாரிகள் இல்லாததால், அதன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
இன்று (07) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில்; 55 நாடுகளிலும், நாட்டின் 24 துறைகளிலும் பணியாற்ற 164 அதிகாரிகள் உள்ளனர்.
இலங்கைக்கு மிக முக்கியமான நாடான இந்தியாவில் 6 பேர் மாத்திரமே பணிபுரிவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு சேவைக்கு தேவையான ஊழியர்களின் எண்ணிக்கை 264 எனவும் தெரியவந்துள்ளது.
தேவையான உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிநாட்டு சேவைக்கான ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.