மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன், தொடர்புடைய குற்றவாளிக்கு (இராணுவ சிப்பாய்) 14 ஆண்டுகளின் பின்னர், மன்னார் மேல்நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளது.
2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி கடமையில் இருந்த இராணுவ சிப்பாய்கள் மீது குறித்த இராணுவ சிப்பாய் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியிருந்தார்.
இதன்போது, இரண்டு இராணுவ சிப்பாய்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் முருங்கன் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, மன்னார் மேல் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்ட நிலையில், மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.