கதிர்காமம் முருகன் ஆலயத்தின் தலைவர் ‘கபுவா’ மற்றும் விகாரையின் திறைசேரிக்கு பொறுப்பான ‘கபுவா’ ஆகியோரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
குழந்தையின் நேர்த்திக்கடனுக்கான பாதாள உலக தலைவர் அங்கொட லொக்காவின் மனைவி கதிர்காமம் ஆலயத்திற்கு வழங்கிய 38 பவுண்கள் எடை கொண்ட தங்க நெக்லஸ் காணாமல் போனமை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கதிர்காமம் ஆலயத்தின் கபுவா துரந்தர சோமிபால ரத்நாயக்க மற்றும் தேவாலய திறைசேரிக்கு பொறுப்பான கபுவா துரந்தர பிரதானி கபுராலாவின் பேரன் சமன் பிரியந்த அல்லது சுட்டி கபு மஹதயா ஆகியோருக்கு இந்த கைது உத்தரவு கிடைத்துள்ளது.
இந்த தங்க நெக்லஸ் காணாமல் போனமை தொடர்பில் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கதிர்காம முருகன் ஆலயத்தில் கதிர்காமத்திற்கு பஸ்நாயக்க நிலமே திஷான் விக்ரமரத்ன குணசேகரவினால் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் விசாரணைக்கு அதனை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் கையளித்தார்.
இதன்படி, அதன் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவின் கீழ், பிரிவு இலக்கம் 1 நிலைய கட்டளைத் தளபதி இன்ஸ்பெக்டர் டி.ஜே. நிஷாந்த தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இது தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்ற B 73047/2021 இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்து சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளது.
அதன்படி, சட்டமா அதிபரின் பணிப்புரை நேற்று (07) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்துள்ளது.