தமிழ்நாட்டில் இன்று காலை சிறிய நிலநடுக்கம் ஒன்று பதிவானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை 7.39 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது 3.2 மெக்னிடியூட் அளவில் பதிவானதாக இந்திய புவியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பில் இந்திய புவியல் ஆய்வு நிலையம் வெளியிட்ட செய்தியில், இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சுமார் 100 கி.மீ. சுற்றளவு வரை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்துடன் செங்கல்பட்டில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தினசரி வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.