Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாணக்கியனுக்கு புலிகளை பற்றி பேச தகுதியில்லை; இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத்!

சாணக்கியனுக்கு புலிகளை பற்றி பேச தகுதியில்லை; இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத்!

3 years ago
in செய்திகள்

விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 9 எம்.பிக்களுக்கு மாத்திரமே உரிமையுண்டு. சாணக்கியனுக்கு உரிமையில்லை. ஏனெனில், அவரது செயற்பாடுகளும் உறவுகளும் சிங்களவர்களுடன் தொடர்புபட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவர் சிங்கள பெண்ணையும் மணக்கவுள்ளார் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (07) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம் தம்மை புலி என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார்.

இதனை சுட்டிக்காட்டி உரையாற்றுகையிலேயே சாமர சம்பத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:

சபையில் பேசிய சாணக்கியன் “நான் ஏதாவது கூறினால் என்னை புலி என்று கூறுவீர்கள்” என்று குறிப்பிட்டார். அவருக்கும் புலிகளுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது.

மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக இருந்தபோது அவரிடம் போய் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக பதவி பெற்றார். ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டார்.

அது மட்டுமல்ல, இவர் கண்டியில் உள்ள சிங்கள பாடசாலையில் தான் கல்வி கற்றார். சிங்கள வீடுகளில்தான் உணவருந்தினார். சிங்களப் பெண்கள்தான் அவரின் தோழிகள். அவர் ஒரு சிங்களப் பெண்ணைத்தான் திருமணமும் செய்யவுள்ளார்.

எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள ஒன்பது உறுப்பினர்களுக்கு மட்டுமே புலிகள் பற்றி பேச உரிமையுண்டு. ஏனெனில், அவர்கள் புலிகளுடன் இருந்தவர்கள், வாழ்ந்தார்கள்.ஆனால், சாணக்கியனுக்கு தன்னை புலி என்று கூற எந்த தகுதியும் உரிமையும் கிடையாது என்றார்.

தொடர்புடையசெய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு
செய்திகள்

“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு

August 1, 2026
கொழும்பு கடற்பரப்பில் 17 கொள்கலன்கள் கடலில் விழுந்தன; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு கடற்பரப்பில் 17 கொள்கலன்கள் கடலில் விழுந்தன; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 1, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!

August 1, 2026
ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு
செய்திகள்

ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

August 1, 2026
இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது
செய்திகள்

இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது

August 1, 2026
Next Post
மதுபானங்களின் விலைகளை அதிகரியுங்கள்; உலக சுகாதார அமைப்பு வலியுறுத்து!

மதுபானங்களின் விலைகளை அதிகரியுங்கள்; உலக சுகாதார அமைப்பு வலியுறுத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு