நல்லாட்சி அரசாங்கத்தில் சதொச அமைச்சராக இருக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பாரியளவிலான மோசடிகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அவரது சகோதரருடன் இணைந்து நாட்டுக்குள் பாரியளவிலான போதைப்பொருட்களை கடத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் கூறுகையில் புனித நோன்பு காலங்களில் அரபு நாடுகளால் இலங்கையில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு வழங்கப்படும் பேரிச்சம் பழங்களை கூட ரிஷாத் பதியுதீன் தனது கட்சி அங்கத்தவர்களுக்கு மாத்திரம் கொடுத்துவிட்டு பேரிச்சம் பழங்களில் கூட பிரதேசவாத அரசியல் செய்யும் ஒரு கேவலமானவர் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
ரிஷாத் பதியுதீன் தனது பாராளுமன்ற உரையில் விமான நிலையம் மூலம் தங்கம் கடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.