பொதுமக்கள் பொலிஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து அவர்களிடம் நேரடியாக முறையிடும் சந்தர்ப்பம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி பொது விடுமுறை நாட்களைத் தவிர, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொலிஸ் தலைமையகத்தில் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15.12.2023) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டம் கோவிட் தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.