அரிசி வியாபாரிகள் ஒரு கிலோ கிராம் சம்பா அரிசியின் விலையை 30 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதன்படி, இலங்கையின் பிரதான அரிசி நிறுவனம் ஒன்று கிலோ ஒன்றுக்கு 230 ரூபாவாக இருந்த சம்பா அரிசியின் விலையை 260 ரூபாவாக உயர்த்தியுள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை மற்றுமொரு நிறுவனம் 245 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு தான்தோன்றி தனமாக விலையை உயர்த்த வாய்ப்பு அளிக்கப்பட்டால், பண்டிகைக் காலம் முடிவடைவதற்குள் சம்பா அரிசியின் விலை கிலோ 300 ரூபாவை எட்டக்கூடும் என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.