வற் வரியை 18% வரை அதிகரிப்பை ஏற்றுக்கொண்டதைக் கொண்டாடும் வகையில் நேற்று இரவு அலரி மாளிகையில் விருந்து நடைபெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரதமர் நடத்திய விருந்தில் அதிபர் ரணில், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச உட்பட பெருமளவிலான அரசாங்க அமைச்சர்கள் கலந்துகொண்டதாகவும் அவர் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வாழ்க்கையை மேலும் சீரழிக்கும் வற் வரி உயர்வை ஏற்றுக்கொண்டது அங்கு கொண்டாடப்பட்டது என்றார்.
வற்வரியை அதிகரிப்பது தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவித்த சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் இந்த விருந்தில் கலந்து கொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
இந்த வாக்கெடுப்புக்கு தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.